கல்முனை வடக்குக்கு தீர்வில்லாமல் சா'மருதுக்கு தீர்வில்லை: கருணா - sonakar.com

Post Top Ad

Monday, 24 February 2020

கல்முனை வடக்குக்கு தீர்வில்லாமல் சா'மருதுக்கு தீர்வில்லை: கருணா


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குத் தீர்வு கிடைக்காமல் சாய்ந்தமருதுக்கு தீர்வெதுவும் கிடைக்கப் போவதில்லையென்கிறார் கருணா அம்மான்.அண்மையில் சாய்ந்தமருதுக்கான நகர சபையை அங்கீகரித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்த போதிலும் உடனடியாகத் தாம் கோட்டாவையும் மஹிந்தவையும் தொடர்பு கொண்டு தொலைபேசியூடாக உரையாடியதன் விளைவாகவே அமைச்சரவை ஊடாக குறித்த வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டதாகவும் கல்முனை வடக்குக்கான பிரதேச சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

சாய்ந்தமருது நகர சபைக்கு உரிமை கோரிக் கொண்டாடிய பிரதேச அரசியல் சக்திகள் வர்த்தமானி இடைநிறுத்த அதிர்விலிருந்து இன்னும் மீளாத நிலையில் கருணா இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment