ஐ.தே.முன்னணி 'செயலாளர்' பதவியிலும் இழுபறி - sonakar.com

Post Top Ad

Monday, 3 February 2020

ஐ.தே.முன்னணி 'செயலாளர்' பதவியிலும் இழுபறி


ஐக்கிய தேசியக் கட்சியில் நிலவி வரும் தலைமைத்துவ இழுபறி அக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்குள்ளும் உருவாகியுள்ளது.ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிய போதிலும் அதன் செயலாளர் பதவியைக் கைப்பற்ற ரணில் தரப்பு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதனால் இப்புதிய இழுபறி ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பிரதமர் வேட்பாளர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமைப்பதவியையும் சஜித்துக்கு விட்டுக் கொடுத்த போதிலும் தலைமைப் பதவியையும் கட்சியின் கட்டுப்பாட்டையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக் கொடுக்க மறுதலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment