இலங்கையில் சீனர்கள் அவமதிப்பு: சீனா கவலை - sonakar.com

Post Top Ad

Monday, 3 February 2020

இலங்கையில் சீனர்கள் அவமதிப்பு: சீனா கவலை


உணவகங்கள், வாடகைக் கார்களில் சீன பிரஜைகளை அனுமதிப்பதற்கு தயக்கம் காட்டப்பட்டு வருவதோடு பகிரங்கமாகவே அதனை துண்டுப் பிரசுரம் கொண்டு அறிவித்து வருவது குறித்து சீனா கவலை வெளியிட்டுள்ளது.சீனாவின் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் இதுவரை 361 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ள அதேவேளை சீனாவுக்கு வெளியில் பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் பல உணவகங்களில் சீனர்களுக்கு அனுமதியில்லையென அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றமை குறித்து சீன தூதரகம் பாரிய அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment