வா'சேனை: வாகன விபத்தில் எஸ்.ஏ. ரபீல் வபாத் - sonakar.com

Post Top Ad

Sunday, 16 February 2020

வா'சேனை: வாகன விபத்தில் எஸ்.ஏ. ரபீல் வபாத்

https://www.photojoiner.net/image/5NxpIpVo

உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவமொன்று இன்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.


வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச் செல்லும் போது வாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்ததாகவும் சைக்கிளின் பின்பக்கத்திலிருந்து சென்றவரே விபத்தில் பலியாகியுள்ளார் என்றும் செலுத்தியவர் படு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் மரணமடைந்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கல்குடா தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ. ரபீல் என்பவராவார். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment