ஐக்கிய தேசியக் கட்சியின் 'சின்னம்' : அடுத்த வாரம் தீர்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 16 February 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் 'சின்னம்' : அடுத்த வாரம் தீர்வு



ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எதிர்வரும் வாரம் தீர்வொன்று காணப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



யானைச் சின்னத்தைப் பயன்படுத்துவதையே பெரும்பாலானவர்கள் விரும்பும் அதேவேளை சஜித் அணி மாற்றீடாக இதய சின்னத்தைத் தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கிறது.

இந்நிலையில், கூட்டணியானது பிறிதொரு கட்சியாக அறியப்படக்கூடாது என்பதிலும் ஐ.தே.க தலைமை சிரத்தை எடுத்து வருவதால் 18ம் திகதியளவில் தீர்வொன்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment