மைத்ரி - கோட்டா ஒன்றரை மணி நேர கலந்துரையாடல் - sonakar.com

Post Top Ad

Friday, 21 February 2020

மைத்ரி - கோட்டா ஒன்றரை மணி நேர கலந்துரையாடல்

https://www.photojoiner.net/image/NWSyky5e

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணியமைத்துள்ள போதிலும் பெரமுன உறுப்பினர்களால் தொடர்ந்தும் சொல் வதைக்குட்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.ஒன்றரை மணி நேரம் நீடித்த குறித்த சந்திப்பில் சுதந்திரக் கட்சி சார்பில் நிமில் சிறிபால டிசில்வா மற்றும் தயாசிறி ஜயசேகரவும் இணைந்து கொண்டுள்ளனர்.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தி ஒன்றிணைந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது. எனினும், சுதந்திரக் கட்சியினர் கோட்டா - மஹிந்தவின் உருவப்படங்களை பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என பெரமுன தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment