போலி மருத்துவர்களுக்கு அபராதம் - சிறை! - sonakar.com

Post Top Ad

Friday, 21 February 2020

போலி மருத்துவர்களுக்கு அபராதம் - சிறை!


நாட்டில் 40,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக அண்மையிலேயே தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் போலி மருத்துவர்களுக்கான அபராதத் தொகை மற்றும் சிறைத் தண்டனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வடிப்படையில், இதுவரை 5000 ரூபாவாக இருந்த அபராதத் தொகை 50,000 ஆகவும் சிறைத்தண்டனையை 5 வருடங்களாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல ஊர்களில் போலி மருத்துவர்களின் சிகிச்சை நிலையங்களை நாடி பெருமளவு மக்கள் செல்கின்ற அதேவேளை அரச வைத்தியசாலைகளில் காணப்படும் அலட்சியமும் இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment