எயார்பஸ் ஊழலில் தொடர்பில்லை என்கிறார் நாமல்! - sonakar.com

Post Top Ad

Friday, 21 February 2020

எயார்பஸ் ஊழலில் தொடர்பில்லை என்கிறார் நாமல்!


அம்பலத்துக்கு வந்துள்ள எயார்பஸ் ஊழலில் தனது பெயரும் இணைத்துப் பேசப்படுவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.இடைத்தரகு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுவதில் அறியப்பட்ட நிமல் பெரேரா எனும் நபரது வங்கிக் கணக்குக்கும் எயார்பஸ் ஊழலில் 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் சென்றடைந்துள்ள அதேவேளை குறித்த நபர் ஏலவே நாமல் ராஜபக்சவின் வழக்கொன்றில் பிரதிவாதியாக உள்ளார்.

இந்நிலையில், தமக்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லையென நாமல் தெரிவிக்கின்றமையும் நேற்றைய தினம் நிமல் பெரேராவின் பிறந்த தின கொண்டாட்டத்தில் நாமல் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment