'கோல்-பேசில்' தற்கொலை செய்வேன்: பந்துல மிரட்டல் - sonakar.com

Post Top Ad

Monday, 24 February 2020

'கோல்-பேசில்' தற்கொலை செய்வேன்: பந்துல மிரட்டல்


மஹிந்தோதய ஆய்வுகூடங்களை நிறுவுவதில் பந்துல குணவர்தன கொளுத்த பணம் சம்பாதித்துக் கொண்டதாக வெளியாகி வரும் தகவல்களை மறுத்துள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் காலி முகத்திடலில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார்.ஒவ்வொரு மஹிந்தோதய ஆய்வு கூட நிர்மாணத்தின் போதும் பந்துல குணவர்தன 10 லட்ச ரூபா இலாபம் பார்த்ததாக ஜே.வி.பி தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, அதற்குப் பதிலளித்து பந்துல இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment