அடிப்படைவாதத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 'புனர்வாழ்வு': பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Monday, 24 February 2020

அடிப்படைவாதத்தால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 'புனர்வாழ்வு': பொலிஸ்இலங்கையில் அடிப்படைவாதத்தால் ஈர்க்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவின் உதவியுடன் புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.இளைஞர்களை 'நல்வழி'ப் படுத்தும் இத்திட்டத்துக்கு இந்தியாவின் உதவியில் பயிற்சி பெற்ற விசேட கண்காணிப்புக் குழு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் எதிர்காலத்தில் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதான பெரும்பாலானோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment