சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சர்ச்சை; நியமனம் வாபஸ்! - sonakar.com

Post Top Ad

Friday, 21 February 2020

சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சர்ச்சை; நியமனம் வாபஸ்!


சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஒருவரை நியமித்தமைக்கு எழுந்த பாரிய எதிர்ப்பையடுத்து அந்த நியமனத்தை வாபஸ் பெற்றுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.பொது நிர்வாக சேவையில் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியமனத்தை இராணுவ அதிகாரியொருவருக்கு வழங்கியமை ஏற்புடையதில்லையென சுங்கத் திணைக்கள தொழிலாளர் சங்கம் வெகுண்டெழுந்ததையடுத்து மஹிந்த ராஜபக்ச இந்த சமரசத்துக்கு வந்துள்ளார்.

கோட்டாபே ராஜபக்சவின் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி அவரது வெற்றிக்காக உழைத்த வியத்மக நிறுவனத்தில் பெரும்பாலானோர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் என்பதோடு அவர்களுக்கு 'நன்றிக்கடன்' செலுத்த வேண்டிய கடமைப்பாட்டில் பெரமுன அரசு திணறிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment