மீண்டும் தூசுதட்டப்படும் புர்கா - ஹலால் சான்றிதழ் விவாகரங்கள்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 February 2020

மீண்டும் தூசுதட்டப்படும் புர்கா - ஹலால் சான்றிதழ் விவாகரங்கள்!இலங்கையில் முகமூடும் வகையிலான ஆடைகளை முற்றாகத் தடை செய்வதற்கு நாடாளுமன்றுக்குப் பரிந்துரை அறிக்கையொன்றை வழங்கியுள்ளது தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழு.ஐ.எஸ் தலைமையகத்திலும் புர்கா அணிதல் தடை செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்ததாகவும் இலங்கையில் ஈஸ்டர் போன்று இன்னுமொரு தாக்குதல் சம்பவம் இடம்பெறாமலிருக்கும் நிமித்தம் தேவைப்படும் பல்வேறு நடவடிக்கைளில் இதுவும் ஒன்றெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்ட சீரமைப்பு,  ஹலால் சான்றிதழ் கட்டுப்பாடு போன்ற விடயங்களையும் குறித்த பரிந்துரையில் உள்ளடக்கியுள்ளதோடு சர்வமத விவகாரங்களையும் கவனிக்கும் ஒரு அமைச்சினை நிறுவுவதற்குமான பரிந்துரையை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக இன்று சபையில் சமர்ப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment