'அன்னத்துக்கு' சிக்கல்; யானையை தெரிவு செய்ய முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 February 2020

'அன்னத்துக்கு' சிக்கல்; யானையை தெரிவு செய்ய முஸ்தீபு!


ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்த போதிலும் குறித்த சின்னத்தை புதிய கூட்டணியான ஜாதிக சமகி பலவேகய உபயோகிப்பதற்கு சட்டச் சிக்கல் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவோடு இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் ஐ.தே.க மற்றும் சஜித் அணி தெரிவிக்கிறது.இப்பின்னணியில் யானைச் சின்னத்தையே உபயோகிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக யானைச் சின்னத்தையே சஜித் அணி விரும்பியிருந்த போதிலும் ஐ.தே.க அதனை நிராகரித்திருந்த நிலையில் இரு தரப்பும் அன்னத்தை தேர்வு செய்திருந்தது. எனினும் இன்று தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து அன்னச் சின்னத்தை உபயோகிப்பதில் சட்டச் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment