பௌத்த தீவிரவாதமே மஹிந்தவின் சூத்திரம்: யோகேஸ்வரன்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 February 2020

பௌத்த தீவிரவாதமே மஹிந்தவின் சூத்திரம்: யோகேஸ்வரன்!

https://www.photojoiner.net/image/BszM3JMV

ஊழல் இல்லாத நாடொன்றை உருவாக்குவதற்கு நாட்டின் அரசியல் சூழலே அடிப்படைக் காரணம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், இன்றைய அரசும் மாற்றத்துக்காக எதையும் செய்யவில்லையென நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் அர்ஜுன அலோசியசின் எதனோல் தொழிற்சாலையொன்று உருவாக்கப்படுவதற்கு எதிராக என்னதான் மக்கள் வெகுண்டெழுந்தாலும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்த நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தனியாருக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளும் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பௌத்த தீவிரவாதத்தை சூத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மஹிந்தவின் அரசியல் தளம் அதனையே மக்களிடம் விதைத்து தற்போது இனங்களிடையே பிரிவினையுணர்வை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு ஐக்கிய இலங்கைக்கான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment