ரஞ்சனால் 'நல்லாட்சி' துகிலுரிக்கப்பட்டுள்ளது: கெஹலிய - sonakar.com

Post Top Ad

Thursday, 9 January 2020

ரஞ்சனால் 'நல்லாட்சி' துகிலுரிக்கப்பட்டுள்ளது: கெஹலிய


ரஞ்சனின் ஒலிப்பதிவுகள் நல்லாட்சி என்ற போர்வையில் இடம்பெற்ற அலங்கோலங்களை அம்பலப்படுத்தி துகிலுரித்துள்ளதாக தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.


19ம் திருத்தச் சட்டம் மூலம் ஜனநாயகத்தை மீளக் கொண்டு வந்து விட்டதாகவும், சுயாதீன நீதித்துறையை உருவாக்கி விட்டதாகவும் பெருமை பேசிக் கொண்டிருந்தவர்கள் திரை மறைவில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது இப்போது புலப்பட்டுள்ளதாக கெஹலிய தெரிவிக்கிறார்.

தொடர்ச்சியாக ரஞ்சனின் ஒலிப்பதிவுகள் மூன்றாந்தரப்பினரால் வெளியிடப்பட்டு வரும் அதேவேளை அவை பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட சிடிக்கள் என ரஞ்சன் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment