புத்தர் சிலை உடைப்பு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 9 January 2020

புத்தர் சிலை உடைப்பு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்புமாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்த சம்பவங்களின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் இம்மாதம்ல 23ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றைய தினமும் புதிய சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் என கருதப்பட்ட இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்கள் தலைமறைவாக இருந்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல் தேடலின் போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment