
நீதியான எதிர்காலம் ஒன்றை உருவாக்கும் நிமித்தம் தாம் பல்வேறு வழிகளில் தகவல்களை அறிந்து, செயற்பட்டு வந்ததாகவும் அதன் பயனை உணர்ந்து கொள்ளும் எதிர்கால சமூகம் தம்மைப் போற்றும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.
விக்கிலீக்ஸ் ஜுலியனுக்கு நிகரான பணியொன்றையே தான் செய்ததாகவும் இதனூடாக நாட்டுக்கே நன்மையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் அந்தரங்க உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகளும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment