அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்த காலத்தில், முறைகேடாக வாகனங்கள் கொள்வனவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணர்வதனவுக்கு இன்று நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.
அவரால் கொள்வனவு செய்யப்பட்ட 8 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், உயர் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டில் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment