தொடர்ந்து வெளியாகும் ஒலிப்பதிவுகள்: சிக்கலில் ரஞ்சன்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 January 2020

தொடர்ந்து வெளியாகும் ஒலிப்பதிவுகள்: சிக்கலில் ரஞ்சன்!


உயர் மட்ட அதிகாரிகள், நீதிபதி மற்றும் பொலிசார் உட்பட ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய நபர்களுடனான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் கைது செய்ய வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.ஒலிப்பதிவுகள், ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இடம்பெற்ற பரிசோதனையின் போது கைப்பற்றப்பட்ட சிடி மற்றும் டிவிடிக்களிலிருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்களின் பதிவுகள் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் பெரமுன சார்பு நபர்களினாலேயே வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது உரையாடல்களை தான் மறுக்கவில்லையெனவும் திருடர்களைப் பிடிக்கும் பணியில் எல்லோருடனும் தான் தொடர்பில் இருந்ததாகவும் ரஞ்சன் தன்நிலை விளக்கமளித்துள்ளார். ஆயினும், பிரதமருடனான உரையாடல் ஒன்றில் ரஞ்சன் துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி பெற முயற்சித்த விவகாரம் ஒன்றுக்கு மாற்று விளக்கம் ஒன்று கலந்துரையாடப்படுவதும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment