பிணை முறி அறிக்கை வெளியாவதைத் தடுக்கும் சட்டமா அதிபர் - sonakar.com

Post Top Ad

Tuesday 7 January 2020

பிணை முறி அறிக்கை வெளியாவதைத் தடுக்கும் சட்டமா அதிபர்


மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான தடவியல் கணக்காய்வு அறிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம் என சட்டமா அதிபர் தன்னை அறிவுறுத்துவதாக தகவல் வெளியிட்டுள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.


குறித்த அறிக்கை வெளியானால் 2005 - 2015 வரையான காலப்பகுதியில் 6500 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளமை நிரூபணம் ஆகும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், அதனை வெளியிடாமல் தடுப்பதற்கே கடந்த தடவை நாடாளுமன்ற தவணையை அவசர அவசரமாக முடித்து வைத்தததாக அண்மையில் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சட்டமா அதிபரின் தலையீடு தொடர்பில் சபாநாயகர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment