கண்டியன் சட்டத்தையும் நீக்க வேண்டும்: ரதன தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 January 2020

கண்டியன் சட்டத்தையும் நீக்க வேண்டும்: ரதன தேரர்


முஸ்லிம் விவாக-விவாகரத்து சட்டத்தைப் போன்று கண்டியன் சட்டம் என அறியப்படும் முன்னாள் கண்டி இராச்சிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான பிரத்யேக விவாக-விவாகரத்து சட்டத்தையும் நீக்கக் கோரி நாடாளுமன்றில் பிரேரணை முன் வைக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.


கண்டியன் சட்டம், முஸ்லிம் விவாக-விவாகரத்து சட்டம் மற்றும் தேசவழமைச் சட்டம் என நாட்டின் முக்கிய மூன்று சமூகங்களுக்கான பிரத்யேக விவாக-விவாகரத்துச் சட்டங்கள் அமுலில் உள்ளன.

எனினும், ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற அடிப்படையில் பிரத்யேக சட்டங்களை நீக்க வேண்டும் என ரதன தேரர் தெரிவிக்கின்றமையும் ஏலவே முஸ்லிம் விவாக-விவாரத்து சட்டத்தை நீக்குவதற்கான தனி நபர் பிரேரணையை அவர் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment