ஒலிப்பதிவுகளுக்கு எதிராக ஹிருனிகா முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 January 2020

ஒலிப்பதிவுகளுக்கு எதிராக ஹிருனிகா முறைப்பாடு


ரஞ்சன் ராமநாயக்க - ஹிருனிகா பிரேமசந்திர இடையேயான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவை திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.


முழுமையான உரையாடலை வெளியிடாமல் தனது அரசியல் வளர்ச்சியை முடக்கும் வகையில் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்ட பதிவுகளே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனைச் செய்பவர்கள் யார் எனத் தனக்குத் தெரியும் எனவும் தெரிவிக்கின்ற ஹிருனிகா, நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

சம்பந்தப்பட்ட தமது அனுமதியின்றி இவ்வுரையாடல் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment