கிரான்: சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 9 January 2020

கிரான்: சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைதுவாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளின் விஷேட சுற்றிவளைப்பயடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு சந்தேக நபர்களும் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த இரண்டு உழவு இயந்திரங்களும் வட்டார வன உத்தியோகத்தர்கள் மற்றும் வாழைச்சேன விஷேட அதிரடிப்படையினரின் சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார். 

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.

 -எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment