8ம் வகுப்பு சித்தியடைந்தோருக்கு அரச தொழில் வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 9 January 2020

8ம் வகுப்பு சித்தியடைந்தோருக்கு அரச தொழில் வாய்ப்புகுறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களில் குறைந்த கல்வி தகுதியைக்கொண்ட 100,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடிய வகையில் பல்லின அபிவிருத்தி பணிக்குழு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ள அமைச்சரவை, தொழில் வாய்ப்பை பெறுவோருக்கான கல்வித் தகைமையை குறைக்கவும் இணக்கம் கண்டுள்ளது.இதனடிப்படையில் எட்டாம் வகுப்பு சித்தியடைந்தோருக்கு, அபிவிருத்தி பணி உதவி சேவை' என்ற பெயரில் அரச தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

பொதுசேவை ஊழியருக்குரிய அனைத்து சலுகைகளுடனும் மாதாந்தம் 30,000 ரூபா ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

உவைஸ் said...

இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

Post a Comment