தேரர் கோரிக்கை; ஆளுனர் உடனடி நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Monday 6 January 2020

தேரர் கோரிக்கை; ஆளுனர் உடனடி நடவடிக்கை



வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நிகவெரடிய சுதீரகம விஹாரையின் விகாராதிபதி, மஹமிதாவ பஞ்ஞாரத்ன தேரர் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நிகவெரடிய சுதீரகம கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினையும் தற்காலிக தீர்வொன்றை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் முன்வந்து வழங்கியுள்ளார்



கடந்த டிசம்பர் 31ஆம் திகதி ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பின்னூட்டம் ஒன்றை இட்ட பஞ்ஞாரத்ன தேரர், ' தமது கிராமத்தில் சுமார் 25 வீடுகள் மற்றும் விஹாரைக்கு குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப் படுவதாகவும், இதற்கு உடனடியாக தீர்வொன்றைப் பெற்றுத்தந்ததால் மிகவும் நல்லது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பின்னூட்டம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட ஆளுநர், 31ஆம் திகதி நிகவெரடிய சுதீரகம விஹாரைக்கு சென்று, அப்பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது அம்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து  கிராம மக்களும் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே நீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டு, பிரதேச சபையின் உதவியுடன் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த தற்காலிக தீர்வுக்கு மேலதிகமாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீரை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதாகவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-GM

1 comment:

Naeem Farook said...

Your speed action is loudable , Thanks the Governer.

Post a Comment