ரஞ்சனை கைது செய்ததில் 'சதி': அமைச்சருக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Monday, 6 January 2020

ரஞ்சனை கைது செய்ததில் 'சதி': அமைச்சருக்கு சந்தேகம்!


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்தமை ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்பட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் செஹான் சேமசிங்க.பொலிசாரின் நடவடிக்கையில் அரசாங்கத்தில் யாரும் தொடர்புபடவில்லையென தெரிவிக்கின்ற அவர், குறித்த நபர்களின் கைதுகள் அரசியல் பழிவாங்கல் இல்லையெனவும் தெரிவிக்கிறார்.

ரஞ்சனின் கைது தெளிவான அரசியல் பழிவாங்கல் என பொது மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்ற நிலையில் இது ஜனாதிபதியின் உத்தரவில் இடம்பெற்ற விடயம் இல்லையென அரசின் உறுப்பினர்கள் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment