ரஞ்சன் லீக்ஸ்; விசாரணைக்குழு அமைக்க அவசரமில்லை: பந்துல - sonakar.com

Post Top Ad

Friday, 10 January 2020

ரஞ்சன் லீக்ஸ்; விசாரணைக்குழு அமைக்க அவசரமில்லை: பந்துல


ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் குறித்து நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்று அமைக்க வேண்டிய அவசரம் எதுவுமில்லையென்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.ஒரு கட்டத்தில் அது அரசியலமைப்புக்கும் - நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையிலான சர்ச்சையாக மாறிவிடும் எனவும் தற்போது நீதிமன்றில் வழக்கு இருப்பதனால் அதுவே போதும் எனவும் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்ததன் பின்னணியில் கைதான விமல் வீரவன்சவின் மனைவி உட்பட அரசின் முக்கிய உறுப்பினர்களின் துணைவியர் சிலரும் ரஞ்சனோடு உரையாடி உதவிகளைப் பெற்றுள்ளமை குறித்த ஒலிப்பதிவுகள் தற்போது வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment