நெலுந்தெனிய: புத்தர் சிலை அகற்றப்படமாட்டாது! - sonakar.com

Post Top Ad

Friday, 10 January 2020

நெலுந்தெனிய: புத்தர் சிலை அகற்றப்படமாட்டாது!

XClNxNR

நெலுந்தெனிய, உடுகும்புற பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வரும் பள்ளிவாசல் அருகில் அண்மையில் இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்படுவதற்கு பதிலாக மதில் சுவர் ஒன்றைக் கட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண இணக்கம் காணப்பட்டுள்ளது.வறகாபொல நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போதே இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதால் இரு தரப்பும் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் திகதி அதிகாலையில் திடீரென இப்புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்த அதேவேளை அதனை அகற்றுவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஜுலை மாதம் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment