நான் வாழ்த்து மட்டுந்தான் சொல்லியிருக்கிறேன்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday, 10 January 2020

நான் வாழ்த்து மட்டுந்தான் சொல்லியிருக்கிறேன்: மஹிந்த


ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தானும் ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடியிருப்பதாக முன் கூட்டியே அறிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.எனினும், அவை வெளியானாலும் பரவாயில்லையெனவும் பெரும்பாலும் தாம் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மாத்திரமே தொடர்பு கொண்டிருந்ததாகவும் மஹிந்த தெரிவிக்கிறார்.

எதிர்க்கட்சியினர் தொடர்புபட்ட ஒலிப்பதிவுகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது சில அமைச்சர்களின் மனைவியர் மற்றும் நெருங்கியவர்களின் உரையாடல்களும் வெளியாகி வருவதனால் தொலைபேசி உரையாடல்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துவதற்கு அமைச்சர்கள் சிலர் பகீரத பிரயத்தனம் மேற்கொள்வதோடு தற்போது ரஞ்சனே கூலிக்கு ஆள் அமர்த்தி அவற்றை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment