வெள்ளை வேன் சாரதிகள் மற்றும் ரூமி பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Monday, 6 January 2020

வெள்ளை வேன் சாரதிகள் மற்றும் ரூமி பிணையில் விடுதலை


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்திய வெள்ளை வேன் சாரதிகள் இருவர் மற்றும் குறித்த செய்தியாளர் சந்திப்பின் ஏற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டு கைதான முன்னாள் அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் ரூமி இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்விவகாரத்தின் பின்னணியில் ராஜித சேனாரத்னவும் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏலவே அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏனைய மூவருக்கும் பிணை வழங்கியுள்ளது.

No comments:

Post a comment