
2009ம் ஆண்டு, அரலகன்வில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது சட்டவிரோதமாக மான் இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதற்குப் பகரமாக 10,000 ரூபா லஞ்சம் பெற முனைந்த குற்றச்சாட்டுக்குள்ளான இரு பொலிசாருக்கு 28 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருந்த குறித்த நபர்களுக்கெதிரான வழக்கு, சுமார் 10 வருட காலம் விசாரணையில் இருந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கான்ஸ்டபிள் ஒருவருக்குமே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment