சஜித் நியமித்த 1900 பேர் தொழில் இழப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 18 January 2020

சஜித் நியமித்த 1900 பேர் தொழில் இழப்பு


வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சஜித் பிரேமதாசவினால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த 1900 பேர் தமது ஒப்பந்தங்களை நடைமுறை அரசு புதுப்பிக்காத நிலையில் தொழில் இழந்துள்ளனர்.தற்காலிக ஒப்பந்தம் அடிப்படையில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையகம், அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் கடந்த நான்கரை வருடங்களில் அவை நிரந்தரமாக்கப்படாத நிலையில் தற்போது 1900 பேர் தொழில் இழந்துள்ளனர்.

சஜித்தின் தொகுதியினா ஹம்பாந்தோட்டை இளைஞர்களுக்கே இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டிருந்த அதேவேளை நூற்றுக்கும் குறைவான சிறுபான்மையினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தமையும் சஜித்தின் நிர்வாகக் கோளாறே நிரந்தர நியமனங்கள் கிடைக்காமைக்கு காரணம் எனவும் தொழிலிழந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

-அஷ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment