2025 வரை ரணில் விட்டுக் கொடுக்க மாட்டார்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Saturday, 18 January 2020

2025 வரை ரணில் விட்டுக் கொடுக்க மாட்டார்: ஹர்ஷ


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை 2025 வரை ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து, கட்சித் தலைமைத்துவ மாற்றம் குறித்து 2022,23 அல்லது 24ம் ஆண்டு பேசலாம் எனவும் 2025 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லையென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் ஹர்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.

இப்பின்னணியில், 2025 வரை ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லையெனவும் சஜித் தலைமையிலான புதிய கூட்டணி இதனை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment