ஈரான்: விமான விபத்தில் 177 பேர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 January 2020

ஈரான்: விமான விபத்தில் 177 பேர் உயிரிழப்பு


ஈரான் தலைநகரிலிருந்து உக்ரேனுக்குப் புறப்பட்டுச் சென்ற உக்ரேனிய பயணிகள் விமானம் ஒன்று இயந்திரக் கோளாறின் காரணமாக விபத்துக்குள்ளானதில் 168 பதிவு செய்யப்பட்டிருந்த பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.உக்ரேனுக்குப் புறப்பட்டிருந்த இவ்விமானத்தில் 82 ஈரானியர்கள், 63 கனேடியர்கள், 11 உக்ரேனியர்கள், 10 சுவீடன் நாட்டவர், நான்கு ஆப்கனிஸ்தானியர் மற்றும் தலா மூன்று பிரத்தானிய, ஜேர்மனிய பிரஜைகள் பயணித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக ஈரானிய செம்பிறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment