உலக தரப்படுத்தல்: இலங்கை கடவுச்சீட்டுக்கு 97வது இடம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 January 2020

உலக தரப்படுத்தல்: இலங்கை கடவுச்சீட்டுக்கு 97வது இடம்


2020ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டுக்கள் தரப்படுத்தலில் இலங்கைக்கு 97வது இடம் கிடைத்துள்ளது.


விசா இன்றி அல்லது விமான நிலையத்தில் விசா பெறக்கூடிய வசதியைக் கொண்டுள்ள கடவுச்சீட்டுக்களின் அடிப்படையில் இத்தரப்படுத்தல் இடம்பெறுகிறது.

இந்நிலையில் 2020 ஆரம்பத்தில் கடந்த வருட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 191 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது விமான நிலையத்தில் விசா பெறக்கூடிய வசதி அல்லது இலத்திரனியல் அனுமதியுடன் நுழையக் கூடிய ஜப்பான் நாட்டு கடவுச்சீட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அமெரிக்க, ஐக்கிய இராச்சிய கடவுச்சீட்டுக்களுக்கு 8வது இடம் கிடைத்துள்ள அதேவேளை 171 புள்ளிகளைப் பெற்று ஐக்கிய அரபு அமீரகம் 18வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கைக் கடவுச்சீட்டு 97வது இடத்தையும் பாகிஸ்தான் 32வது இடத்திலும் இந்தியா 58வது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment