ஒலிப்பதிவுகள்: ரஞ்சனுக்கு ஒரேயொரு சந்தேகம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 January 2020

ஒலிப்பதிவுகள்: ரஞ்சனுக்கு ஒரேயொரு சந்தேகம்


தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும், பொலிசாரிடம் இருக்க வேண்டிய ஒலிப்பதிவுகள் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிக்குகள் மற்றும் மூன்றாம் நபர்களிடம் சென்றது எப்படி? என கேள்வியெழுப்பியுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.


பெரும்பாலும் தன்னோடு உரையாடிய அனைவரது பேச்சுக்களையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த ரஞ்சன் ராமநாயக்க அவற்றை சிடிக்களில் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. ரஞ்சனின் வீட்டில் இடம்பெற்ற சோதனையின் போது இந்த சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவற்றை மூன்றாம் தரப்பினரே வெளியிட்டு வருவதோடு நேற்றைய தினம் நாடாளுமன்றிலும் இது பற்றிப் பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிடிக்கள் தற்போது நீதிமன்றில் இருப்பதால் அவை தொடர்பில் தான் கருத்துரைக்க விரும்பவிலலையெனவும் அவை மூன்றாம் தரப்பின் கைகளுக்குச் சென்றது எப்படியெனவும் ரஞ்சன் கேள்வியெழுப்புகின்றார்.

No comments:

Post a comment