நீதிமன்றுக்கு கைதிகளை ஏற்றிச் சென்ற வழியில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹவ சிறைச்சாலையிலிருந்து கல்கமுவ நீதிமன்றுக்கு கைதிகளை ஏற்றிச் சென்ற வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியொன்று மோதியதே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கும் பொலிசார் குறித்த லொறி சாரதியைக் கைது செய்து நாளை வரை விளக்கமறியலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment