பௌத்தர்களின் வாக்குகள் இழப்புக்கு ரஞ்சன் காரணம்: UNP - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 December 2019

பௌத்தர்களின் வாக்குகள் இழப்புக்கு ரஞ்சன் காரணம்: UNP


கடந்த ஜனாதிபதி தேர்தலில் பௌத்தர்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தமைக்கு ரஞ்சன் ராமநாயக்கவின் நடவடிக்கைகளும் காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.இப்பின்னணியில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட அனுமதி கிடைக்காது என நம்பப்படுகிறது. பௌத்த துறவிகள் விவகாரத்தில் ரஞ்சனின் தலையீடு சிங்கள மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளதாக நம்பப்படுகின்ற அதேNவுளை, இளம் பிக்குகள் மீதான துஷ்பிரயோகங்களை வெளிக் கொண்டு வந்ததன் ஊடாக தாம் சமூகத்துக்கு தேவையான பணியொன்றையே செய்திருப்பதாக ரஞ்சன் தெரிவிக்கிறார்.

ஐ.தே.க ஊடாக போட்டியிட முடியாது போனாலும் தான் சுயாதீனமாக தேர்தலில் களமிறங்கவுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment