
எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
மார்ச் 3ம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் நடுப்பகுதியில் தேர்தல் நடாத்தப்படவுள்ள அதேவேளை, கஷ்டப்பட்டு பெற்றுக் கொண்ட ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பெரமுன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நிமல் ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரமுன தனிப்பெரும்பான்மையைப் பெற்றே ஆட்சியமைக்க வேண்டும் எனவும் சிறு கட்சிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுத்து மீண்டும் இழுபறி நிலைக்குச் செல்ல முடியாது எனவும் வெலிமடையில் வைத்து அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment