சம்பிக்க கைதாகக் காரணமாக அமைந்த வாகன விபத்தில் சம்பந்தப்பட்ட சந்தீப் எனும் நபருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை செலுத்தியதோடு அரச உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தின் பின்னணியில் கைதான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment