ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாக தெரிவு - sonakar.com

Post Top Ad

Saturday, 14 December 2019

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாக தெரிவு


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பல வருடங்களாக இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இது வருடாந்தம் இப்தார் நிகழ்வுகள், குர்ஆன் தப்ஸீர் வகுப்புக்கள், வருடாந்த மாணவர் ஒன்றுகூடல்கள், பல்கலாசார நிகழ்வுகள், “அரவணைக்கும் கரங்கள்” என்ற பெயரில் கொடை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு  நிகழ்வுகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.இம் முஸ்லிம் மஜ்லிஸின் ஆண்டுப் பொதுக் கூட்டம் டிசெம்பர் மாதம் 12ம் திகதியன்று பல்கலைக்கழக வளாகத்தில்  இடம்பெற்றது.  அக்கூட்டத்திற்கு பிரதம அதிதிகளாக பல்கலைக்கழக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. அஜ்வத் அவர்களும் , பட்டப்பின் படிப்புக் கற்கை நெறியின் கணினி மென்பொருள் ஆய்வாளர் A.H.M அதீக் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அதிதியாக பொறியியலாளர் இஹ்ஸான் ஜவ்ஸான அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கான மஜ்லிஸ் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய கல்வியாண்டுக்கான சிரேஷ்ட பொருளாளராக பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. அஜ்வத் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஆண்கள் சார்பில் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக M.B.M. சதீம் கானும், உப தலைவராக M.H. பயாஸும் , பொதுச் செயலாளராக  S.M. தஸ்னீமும், இணை செயலாளராக M.A.M. அதீபும், கனிஷ்ட பொருளாளராக M.I.M றிமாஸும், பதிப்பாசிரியராக A.K.K. அஸ்மான் கானும், கல்விச் செயலாளராக M.W.M.A. முஹய்மினும், ஊடக செயலாளராக M.L.M. இஜாஸும், ஊடக ஒருங்கிணைப்பாளராக A.B.M அல் அஸீமும் நியமிக்கப்பட்டனர். மேலும் சமய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக S.M றிஸ்கான், F. பஸால் மொஹமட் ஆகியோரும் , சமூக சேவை மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளர்களாக J.M. இன்ஸாப், A.J யஹ்யா அய்யாஷ் ஆகியோரும், உதவிக் கனிஷ்ட பொருளாளராக S. அப்துல் ரஹ்மானும், பொதுத் தொடர்புகளுக்கு பொறுப்பாக F.M  ஸலீதும் நியமிக்கப்பட்டனர். மேலும் சங்க உறுப்பினர்களாக F.M அஸ்லிம்,  L.M அஸாருதீன்,M.N.M. நபெய்ஸ், M.A.M வசீம், M.I காஸிம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பெண்கள் சார்பில் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவியாக M.F.F பஹ்மாவும், உப தலைவியாக M.Z.F. பர்ஹாவும், செயலாளராக S.F. ஷப்னாஸும்,. உதவிக் கனிஷ்ட பொருளாளராக M.N.F ஹஸானாவும், ஊடக செயலாளராக M.M.F. ஹஸ்னாவும், பதிப்பாசிரியராக M.H. ஹஸீக்காவும் நியமிக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் 2019ஆம் ஆண்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் சார்பிலான மஜ்லிஸ் தலைவர்களான M.L.A. நிஸாம், I.I தஸ்னீம் ஆகியோருக்கு ஞாபகச் சின்னம்  வழங்கி அவர்களின் சேவைகள் கௌரவிக்கப்பட்டதும் முக்கிய அம்சம் ஆகும்.

2020ஆம்  உண்டு நிர்வாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வல்ல இறைவன் அல்லாஹ் இவர்களின் சேவையை பொருந்திக் கொள்வானாக.

-Nawas
-

No comments:

Post a comment