சுவிஸ் தூதரக ஊழியர் பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Monday, 30 December 2019

சுவிஸ் தூதரக ஊழியர் பிணையில் விடுதலைகோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியான கையோடு வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகக் கூறி உருவான பரபரப்பின் பின்னணியில் கைதான சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த கடத்தல் சம்பவம் அரசுக்கெதிரான நாடகம் என தெரிவித்ததோடு சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட தகவல்கள் குறித்த ஊழியரின் நடவடிக்கைகள், நடமாட்டத்துடன் தொடர்பற்றிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 16ம் திகதி கைது செய்யப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment