மட்டக்களப்பு - இந்தியா விமான சேவையை ஆரம்பிக்கத் திட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 30 December 2019

மட்டக்களப்பு - இந்தியா விமான சேவையை ஆரம்பிக்கத் திட்டம்


யாழ் - இந்தியா இடையேயான விமான சேவையையடுத்து மட்டக்களப்பு - இந்திய நகரங்கள் இடையேயான விமான சேவையை ஆரம்பிக்க உதவத் தயார் என தெரிவித்துள்ளது இந்தியா.


1958ல் மட்டு நகரில் விமான நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்த போதிலும் யுத்த சூழலில் 1983 அளவில் இராணுவம் விமான நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

தற்போது சிவில் விமான சேவைகளை அபிவிருத்தி செய்யும் நவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் தென்னிந்திய நகரங்கள் - மட்டக்களப்பு இடையேயான விமான சேவையை ஆரம்பிக்கவும் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும் இந்தியா உதவத் தயார் என இலங்கைக்கான இந்தியத் தூதர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment