சம்பிக்கவையடுத்து கோட்டா அரசு சிறைப்படுத்த முனைந்த ராஜித சேனாரத்னவுக்கும் இன்று நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
எனினும், கடவுச்சீட்டுக்களை ஒப்படைத்து விட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவில் விளக்கமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுப் பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் ராஜிதவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் வைத்தியசாலையில் அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment