ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக பிரதானியாக இருந்த ஐ.எச்.கே மஹநாம மற்றும் முன்னாள அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு, முறையே 20 மற்றும் 12 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தகர் ஒருவரிடம் 20 மில்லியன் லஞ்சம் பெற்ற நிலையில் கைதான குறித்த நபர்கள் வாகன தரிப்பிடம் ஒன்றில் வைத்து லஞ்சப் பணத்தை பெற்றிருந்தனர்.
மைத்ரி ஆட்சியில் இடம்பெற்ற பாரிய அதிகார துஷ்பிரயோகங்களுள் இதுவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment