இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச எதிர்வரும் 29ம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில் அங்கு அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன.
வை.கோ தலைமையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டில்லியில் இடம்பெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து ஆதரவாளர்கள் வரவுள்ளதாகவும் வை.கோ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment