கொழும்பு நகரில் காலை 5.30 முதல் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகரின் துப்பரவு பணிகளுக்குப் பொறுப்பான இரு தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் நகரம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது குறித்த நிறுவனங்களின் பொறுப்பென இறுக்கமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் முக்கிய இடங்களில் பொலிசார் தலையிட்டு அசுத்தப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
ஜனாதிபதியின் கொழும்பு நகரை அழகாக்கும் முன்னைய செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment