திரைமறைவில் 'பன' சொல்லி மக்களை தயார்படுத்தினோம்: ஞானசார - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 November 2019

திரைமறைவில் 'பன' சொல்லி மக்களை தயார்படுத்தினோம்: ஞானசார


ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்த ஊடகங்களுக்கு முன் காட்சியளிக்காவிடினும் விகாரைகள் ஊடாக மக்களை ஒன்று திரட்டும் பணியைச் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார் ஞானசார.இக்காலத்தில் சுமார் 250 பன நிகழ்வுகளை நடாத்தி குறைந்தது ஆறு லட்சம் சிங்கள மக்களிடம் அவர்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் சிங்கள தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்ததாக ஞானசார மேலும் தெரிவிக்கிறார்.

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்ற மாயையைத் தற்போது உடைத்திருப்பதாகவும் இந்த இலக்கை நோக்கிய தமது பயணத்துக்கு இனி அவசியம் இல்லையென்பதால் பொதுத் தேர்தல் முடிந்ததும் தமது அமைப்பான பொது பல சேனா கலைக்கப்படவுள்ளதாகவும் முன்னதாக ஞானசார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment