
புதிய ஜனாதிபதி தனது அமைச்சரவையை நியமிக்க வழி விடும் வகையில் தான் பதவி விலகிக் கொள்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார் ஹர்ஷ டி சில்வா.
இதேவேளை, 1990 சுவ செரிய அமைப்பினை ஜனாதிபதி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அதனைச் செயற்படுத்த வேண்டும் எனவும் அதனூடாக மக்கள் பயனடைந்து வருவதாகவும் அவர் உருக்கமான கோரிக்கை முன் வைத்துள்ளார்.
தனது பொறுப்பின் கீழிருந்த குறித்த தொண்டு நிறுவனத்தின் தேவையையும் சேவையையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச அதனை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment