ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் தனது அமைச்சு மற்றும் கட்சிப் பதவிகளைத் துறப்பதாக தெரிவித்துள்ளார் ஹரின் பெர்னான்டோ.
பதுளையிலும் கோட்டாபே ராஜபக்சவே வென்றுள்ள நிலையில் 2014ம் ஆண்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ஊவா மாகாண சபையில் போட்டியிட்டு ஹரின் உருவாக்கிய வெற்றி அலையை ஐக்கிய தேசியக் கட்சி தானாகப் பறி கொடுத்துள்ள நிலையே காணப்படுகிறது.
தற்சமயம் கோட்டாபே ராஜபக்ச முன்னணியில் இருக்கின்ற அதேவேளை ஹரின் இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment